ஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா ,one month 10 kg weight loss plan in tamil

தற்போதைய வேலைப்பளுமிக்க உலகில், உடல் ஆரோக்கியத்தின் மீது கூட அக்கறை காண்பிக்க நேரமில்லாமல் பலரும் அவஸ்தைப்படுகிறோம். மேலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன.

உடல் எடை அதிகரிப்பதால், பலரும் அதனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல், உடல் பருமனுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் சந்திக்க நேரிடுகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், டயட்டில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே போதுமானது. அதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும். இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது

 

%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%88

தேவையான பொருட்கள்: சுடுநீர் – 1 கப் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன் இஞ்சி பவுடர் – 1/2 டீஸ்பூன் எலுமிச்சை தோல் – 2 துண்டுகள் தேன் – சுவைக்கேற்ப

 

செய்முறை #1 முதலில் கொதிக்கும் சுடுநீரில் தேனைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். செய்முறை #2 மசாலாப் பொருட்கள் அனைத்தும் நீரில் நன்கு இறங்கி, பானம் சற்று குளிர்ந்ததும், அதில் தேன் சேர்த்து கலந்து வடிகட்டினால், பானம் தயார்.

 

பருகும் முறை: உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். குறிப்பு உடலுழைப்பு இல்லாத எந்த ஒரு வாழ்க்கையும் உடல் பருமனுடன், உடல் ஆரோக்கியத்தையும் முழுமையாக அழித்துவிடும்.

 

எனவே எடையைக் குறைக்க வேண்டுமெனில், கட்டாயம் தினமும் குறைந்தது 45 நிமிட உடற்பயிற்சி மிகவும் அவசியமானது என்பதை மறவாதீர்கள்.

Loading...
Categories: Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors