பூண்டு வெங்காய காரக்குழம்பு சைவ சமையல்,poondu vengaya kara kulambu-saiva samayal in tamil

Loading...

சிறிய வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 50 கிராம்
தக்காளி – 1
புளி – எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு

 

%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae

முதலில் ஊற வைத்த புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, மசாலாவுக்கு எடுத்து வைத்த பொருட்களை பொன்னிறமாக வதக்கவும். ஆற வைத்த பின்னர் அனைத்தையும் பொடி போல அரைக்கவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். இத்துடன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பிட்டு, பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு மசியும் வரை வதக்கவும். வதக்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வரும்போது, புளித்தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கி மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors