நோய் வராமல் இருக்க சமையல் அறையை சுத்தமாய் வைத்திருங்கள்,samayal arai tips in tamil language

* காய்கறி நறுக்கும் பலகை, கத்தி இவற்றினை அன்றாடம் சுத்தமாய் கழுவுகின்றீர்களா? அதாவது சுடுநீர் சோப் கொண்டு தினமும் சுத்தம் செய்கின்றீர்களா?
* சமையலறை தரையினை சுடுநீர் தரை சுத்தம் செய்யும் பொருள் கொண்டு தினம் இரு முறை சுத்தம் செய்யுங்கள்.
* சுத்தமான துணிகொண்டே பாத்திரங்கள், மேஜை இவற்றினைத் துடையுங்கள்.
* இரண்டு வாரங்களுக்கொருமுறை சமையல் பொருள் வைக்கும் இடங்களை சுத்தம் செய்யுங்கள்.
* வாரமொரு முறை சமையலறை ஜன்னல், கதவு, சுவர் இவற்றினை சுத்தம் செய்யுங்கள்.

ஒரே துணியினைக் கொண்டு அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யாதீர்கள். தனித்தனி துணிகளை பயன்படுத்துங்கள். துணிகளை சுடுநீர் சோப் சேர்த்து ஊற வைத்து பின் நன்கு துவைத்து அலசுங்கள்.
samayal-arai-tips-in-tamil-language

* பாத்திரங்களை வெதுவெதுப்பான நீர்+சோப் கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது.
* பாத்திரங்களில் ஈரமின்றி வையுங்கள்.
* அலமாரிகளில் பூச்சி வராமல் இருக்க அதற்கான பாதுகாப்பான மருந்துகளை பயன்படுத்துங்கள்.
* சமைத்த உடனேயே அவ்விடத்தினை சுத்தம் செய்யுங்கள்.
* உணவுப் பொருட்களை நல்ல மூடி கொண்டு மூடுங்கள்.

* சமையலறை நல்ல வெளிச்சத்துடனும் காற்றோட்டத்துடனும் இருக்கட்டும்.
* குப்பை கூடையினை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள்.
* குப்பைகளை முறையாக உடனுக்குடன் கொட்ட வேண்டிய இடத்தில் முறையாய் கொட்டுங்கள்.

* சமையல் செய்யும் பொழுது உங்களது கைகள் சுத்தமாய் இருக்க வேண்டும். கையில் புண் காயத்தோடு சமையல் பொருட்களை கையாளாதீர்கள். இது மிகத் தவறானது. சிறு காயங்களை முறைப்படி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* சமையல் செய்யும் முன் உங்கள் தலைமுடியினை நன்கு வாரி முறைப்படுத்துங்கள். உணவில் முடி இருப்பது உறவு அல்ல. அருவருப்பு.
* கைகளை சோப் கொண்டு முழங்கை வரை சுத்தம் செய்த பின் சமயலைத் தொடங்குங்கள்.
* நகங்களில் இருக்கும் அழுக்கு உங்களுக்கும் மற்றவருக்கும் ஆரோக்கிய கேடு நகங்களை வெட்டி சுத்தமாய் வைத்திருங்கள்.

* உணவின் முன்பு இருமவோ, தும்மவோ செய்யாதீர்கள். செய்தால் கிருமிகளை பரப்பும் ஏஜண்டாக நீங்கள் மாறி விடுவீர்கள்.
* கழுத்தில் போன் வைத்து பேசிக்கொண்டே எந்த வேலையினையும் செய்வதை தவிருங்கள்.
* 200-க்கும் மேற்பட்ட நோய்கள் சுகாதாரமற்ற உணவினாலும், தண்ணீராலும் மட்டுமே ஏற்படுகின்றது. இதன் பாதிப்பு உயிரிழப்பு வரை கூட சென்று விடுகின்றது.
* கொழுப்பற்ற தயிருடன் சாலட் காய்கறிகள், புதினா, கொத்தமல்லி, வெள்ளரி இலைகள் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* பழங்கள் உண்ணும் பழக்கத்தினை கடை பிடியுங்கள்.
* செல்போன், டி.வி. இவற்றுடனான நேரத்தினை வெகுவாய் குறையுங்கள்.
* நிறைய அடிக்கடி நடங்கள்.
* பார்ட்டியில் அதிகம் சாப்பிட்டு விட்டீர்களா. பரவாயில்லை அடுத்த இரண்டு வேளை எளிய உணவாக அளவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* உணவு சமைக்கும் பொழுது முடிந்தவரை மூடி வையுங்கள்.

* பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமைக்க பயன்படுத்துவது தீங்கானது. எனவே பொரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் அளவான எண்ணெயை பயன்படுத்துங்கள்.
* இரு வாரத்திற்கு கொருமுறை குளிர் சாதன பெட்டியினை சுத்தம் செய்யுங்கள்

Loading...
Categories: Veettu Kurippugal TIps

Leave a Reply


Sponsors