ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா? ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா,soap tips in tamil

நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெயே அழுக்குகளையும் இறந்த செல்களையும் சரும துவாரங்கள் வழியாக வெளியேற்றும். வெளித் தோல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவை குளிக்கும்போது லேசாக சோப்பை போட்டாலே போய்விடும். ஆனால் சோப்பை நுரைவரும் அளவிற்கு போட்டால்தான் சிலருக்கு திருப்தியே உண்டாகும். அப்படி செய்தால் இயற்கை எண்ணெய்யை முழுவதும் அகற்றுவதோடு, அழுக்குகளும் சேர்ந்து சரும அலர்ஜியை உண்டாக்கும். விஷயம் இப்படியிருக்க, இதில் ஒரே ஒரு சோப்பை குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களும் உபயோகிப்பார்கள். இது நல்லதா என சரும மருத்துவர் கூறுகிறார் தொடர்ந்து படியுங்கள்.

soap-tips-in-tamil

சரும வகை : ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான சருமம் அமைந்திருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம். சோப்பின் அமில சம நிலை : சிலருக்கு என்ணெய் சருமமாக இருக்கும். இன்னும் சிலருகு வறண்ட சருமமாக இருக்கும். எது எப்படியோ எல்லாரும் பொதுவாக பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும்

, மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது. எண்ணெய் சருமம் : கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

வறண்ட சருமம் : வறண்ட சருமம் இருப்பாவ்ரகள் க்ரீம் நிறைந்த சோப் உபயோகிப்பதால் சருமம் வறட்சி, சுருக்கம், அலர்ஜி போன்றவற்றிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புள்ளது.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors