ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் ,Spicy chettinad fish fry in Tamil,chettinad Recipes list In Tamil

மீன்- 1/2 கிலோ

மிளகு-2 தேக்கரண்டி
சீரகம்-2 தேக்கரண்டி
சோம்பு-1 தேக்கரண்டி
இஞ்சி- 1 இன்ச் நீளம்
பூண்டு-8 பல்
எலுமிச்சை-1
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

சோளமாவு -1 தேக்கரண்டி.

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5

மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு + இஞ்சி பூண்டு விழுது + எலுமிச்சை சாறு +உப்பு+ சோளமாவு  போட்டு பிசையவும்.

சோளமாவு மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்க உதவும்.  அதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர் பதனப் பெட்டியில் வைக்கவும். பின்னர், ஒரு தோசைக்கல்லில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசறி வைத்த மீன் துண்டங்களில் ஒவ்வொன்றாய் போடவும். தீயை சீராக எரிய விடவும்.

மீன் துண்டங்களை ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும்… கருகாமல் இருக்க.

பின்மீனில் ஒட்டியுள்ள மசாலா சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், அவற்றை மிக மெதுவாக உடையாமல் அப்படியே புரட்டிப் போடவும். இரு பக்கமும்  நன்கு வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும்.

Loading...
Categories: Chettinad Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors