முடி அடர்த்தியா வளர ,ஆசையிருந்தா இந்த உணவுகளை வாரம் ஒருமுறையாவது ட்ரை பண்ணுங்க ,thalai mudi adarthiyaga valara sapida vendiyavai

ஆண் (அ) பெண் என இரு பாலினத்தவரிடமும் முடியின் ஆரோக்யத்தைப் பற்றியக் கவலை உள்ளது.அனைவருக்கும் முடி அழகாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.மார்க்கெட்களில் முடிக்கு என்று பல்வேறு ரசாயனம் கலந்த செயற்கைப் பொருட்கள் நிறைந்து உள்ளது .எனவே மக்கள் அவற்றை வாங்கி உபயோகிக்கவும் செய்கின்றனர்.ஆனால் இவை முடிக்கு அதிக சேதத்தையே ஏற்படுத்தும். எனவே சிறந்த முடிக்கு பல்வேறு ரசாயனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட பல நல்ல தரமான உணவு பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கீரை: கீரையில் வைட்டமின் ஏ,பீட்டா கரோட்டின்,ஃபோலேட்,வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து என்று அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.இவை ஸ்கல்ப்பைப் பராமரிக்கவும்,முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0-thalai-mudi-adarthiyaga-valara-sapida-vend

கொய்யா: இது சிறந்த பழம்.இது எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடியது இந்த பழத்தில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது.இது முடி உடைவது மற்றும் நொருங்குவதில் இருந்து பாதுகாக்கிறது.

 

சர்க்கரை வள்ளிக் கிழங்கு : இவற்றில் பீட்டா கரோட்டின் நிறைந்து உள்ளது.நமது உடல் இந்த பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது.இந்த கிழங்கை சாப்பிடுவதன் மூலம் வறண்ட மற்றும் உலர்ந்த முடியை அழகாக மாற்றலாம்.

 

முட்டை: முட்டையில் பயோட்டின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி உள்ளது.இது முடியின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் இது முடியின் உள்பகுதியைத் தூண்டுகிறது.

பருப்பு: உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் ஸ்கல்ப்பிற்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது.பருப்புகளை போதிய அளவு உணவில் சேர்ப்பதால் உடலில் ஃபோலிக் அமிலம் சேர்கிறது.இதனால் முடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளர்கிறது.

 

நெல்லிக்காய்: இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய மற்றும் விளையக்கூடிய பழம்.இது தலைமுறை தலைமுறையாக முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய மற்றும் விளையக்கூடிய பழம்.இது தலைமுறை தலைமுறையாக முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

பாதாம்: பெரும்பாலும் இந்தியர்கள் பாதாம் எண்ணெய்யை முடிக்கு பயன்படுத்துகின்றனர்.அது மட்டுமின்றி பாதாம் சாப்பிடுவதால் உடலில் மெக்னீசியம் அதிகம் சேர்கிறது.இது முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

வால்நட்ஸ்: வால்நட்ஸ்-ல் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.இது முடி வளர நன்கு உதவும்.தினமும் 2 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் வித்தியாசம் தோன்றும்.

 

கேரட்: முடி வேகமாக வளரவும்,முடியின் அடர்த்திக்கும் உதவுகிறது. ஆளி விதை மற்றும் சூரியகாந்தி விதை: இந்த விதைகளில் துத்தநாகம்,புரதம்,பொட்டாசியம்,செலினியம்,பயோட்டின்,இரும்பு,தாமிரம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி,மெக்னீஷியம் மற்றும் கால்சியம் உள்ளது.இவை முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

Categories: arokiya unavu in tamil, Azhagu Kurippugal

Leave a Reply


Sponsors