தொப்பையை குறைக்கனும்னா நீங்க இந்த மாற்றங்கள் கண்டிப்ப செஞ்சே ஆகனும் , thoppai kuraiya valimuraigal

நல்ல கொழுப்புள்ள எண்ணெய் : கொழுப்பை குறைக்க வேண்டும்.உணவு வறண்டு,உலர்ந்து காணப்பட்டால் எண்ணெய் ஊற்றாமல் அதற்கு பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம். நல்லக் கொழுப்பு அதிகம் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தலாம்.உதாரணமாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.சமைக்கும் முறைகளை மாற்றலாம்.

ஆவியில் வேக வைப்பது,வறுப்பது,பேக்கிங் முதலியவற்றை முயற்சிக்கலாம். உணவில் உப்பின் அளவு : உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.ஏனெனில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல் எடைக்கும் வழிவகுக்கும். உப்பிற்கு பதிலாக மூலிகைகள்,மசாலா,எலுமிச்சைச் சாறு,வினிகர்,கடுகு இவற்றை சேர்க்கலாம்.எலுமிச்சை சாறு உப்பிற்கு மாற்றாக மட்டுமின்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை அளவைக் குறைக்கவும்:
%e0%ae%a4%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a8

சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் (அ) உட்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும்.சர்க்கரை இல்லாத மாத்திரைகள் என்று மார்க்கெட்களில் விளம்பரப்படுத்துகின்றனர். இவற்றை தவிர்க்கவும் ஏனெனில் இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.பேக்கிங் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக பழங்களைப் பயன்படுத்தலாம்.மேலும் தயிர்/கூழ்/கஞ்சி இவற்றில் சர்க்கரைக்கு பதிலாக பழங்களை சேர்ப்பதால் சுவைக்கு சுவையும்,ஆரோக்கியமும் கிடைக்கும். நார்ச்சத்தை அதிகரிக்க வேண்டும்: வெள்ளை நிற அரிசிக்கு பதிலாக பழுப்பு நிற அரிசியும்,பாஸ்தாவிற்கு பதிலாக கோதுமை பாஸ்தா,வெள்ளை நிற அவலுக்கு பதிலாக பழுப்பு நிற அவலை உபயோகிக்கலாம். இந்த வகை உணவுகள் அடிக்கடி பசியை ஏற்படுத்தாமல் இருப்பதுடன் உடல் எடை குறையவும்,மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கவும் உதவுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

மேலே கூறப்பட்டுள்ள உணவுகளுடன் காய்கறிகளை சேர்ப்பதால் சத்தானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. சாஸ் மற்றும் டிப்ஸ் இவற்றை குறைக்க வேண்டும்: மார்க்கெட்களில் கிடைக்கும் சாஸ்க்கு பதிலாக பச்சை நிற சட்னி,தக்காளி மற்றும் வெங்காய சட்னி தயாரித்து சாப்பிடலாம்.மேலும் கிரீம்,முழு கொழுப்புள்ள ஆடை நீக்காத பால்,புளிப்பு கிரீம் இவற்றிற்கு பதிலாக ஆடை நீக்கப்பட்ட பால் (அ) தயிர் பயன்படுத்தலாம். மயோனைஸ் : இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனால் இதில் அதிகமான கொழுப்பு உள்ளது.இதனால் உடல் எடை அதிகரிக்கும்.இந்த மாயோனிஸ்ஸிற்கு பதிலாக தயிர் உபயோகிக்கலாம்.தயிரைப் பயன்படுத்தி சான்ட்விச் மற்றும் மயோனைஸைக் கொண்டு சமைக்கும் உணவுகளை சமைக்கலாம். பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும்: பழச்சாறுகளுக்குப் பதிலாக பழங்கள் சிறந்தது.இவை நல்ல சுவையுடனும்,நார்ச்சத்து நிறைந்தும்,பசியையும் போக்குகிறது.பழங்களாக உண்பதால் விட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் உடலில் சேரும்.ஆனால் இவற்றை பழச்சாறுகள் தருவதில்லை.

கால்சியம்: பால் மட்டுமே உடலுக்கு போதுமான அளவு கால்சியத்தைத் தருகிறது என்ற கட்டுக்கதை உள்ளது.கால்சியம் மட்டுமே ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் இருந்து எலும்பைப் பாதுகாக்கிறது.ஆனால் பாலில் மட்டும் கால்சியம் இல்லை பால் பொருட்களான பன்னீர்,தயிர்,பசுமையான காய்கறி இவற்றில் கால்சியம் உள்ளது. கார்போஹைட்ரைட் உணவுகள் : நமது உணவில் கார்போஹைட்ரெட் மிகவும் முக்கியமானது.ஆனால் அதற்காக கார்போஹைட்ரெட் நிறைந்த கேக்,பிஸ்கட்களைத் தவிர்க்க வேண்டும்.ஓட்ஸ்,கோதுமை,பழுப்பு அரிசி இவை அனைத்தும் கார்போஹைட்ரெட் நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானதும் கூட.

எடையில் கட்டுப்பாடு அவசியம்: உயரத்திற்கு ஏற்ற எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதையே பின்பற்ற வேண்டும் அதனால் உணவிலும் கட்டுப்பாடு தேவை. இவை அனைத்தையும் பின்பற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

Categories: Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors