எலும்புகள் ஆரோக்கியமின்றி உள்ளதா,Udal elumpu valimai pera Tips Tamil Maruthuvam

கல்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானர்கள் அவதிப்படுகின்றனர்.

கல்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள்

பாலில் கல்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டின் பவுடரை சேர்த்து அருந்தினால், ஒரு நாளைக்கு தேவையான கல்சிய சத்தை பெறலாம். பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். தயிரில் அதே கல்சியம் இருக்கிறது. முட்டை, வெண்ணெய் போன்றவற்றிலும், புரதமும், கல்சியமும் உள்ளன.

 

%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d

உலர் அத்திப்பழத்தில் கால்சியம், இரும்பு சத்துகள் உள்ளன. பழத்தின் இரண்டு மூன்று துண்டுகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இதற்கடுத்து அனைத்து கடல் உணவுகளிலும் கல்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. இறாலில் கல்சியம் அதிகமாக உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால் அந்த கல்சியம் சத்து போய்விடும்.

சாலமன் மீனில் ஒமேகா 3, பேட்டி ஆசிட் இருப்பதோடு இந்த மீன், கடல் நீரில் உள்ள கனிமச்சத்துகளை உறிஞ்சிக்கொள்வதால் இதனை முள்ளோடு சாப்பிடவேண்டும். இதில் கல்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துகளையும் பெறலாம்.

Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors