Loading...

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ – 1
உருளைக்கிழங்கு – 2
கடலை மாவு – 5 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 6
மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையானது

 

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8dvalaipoo-cutlet-in-tamil

செய்முறை :

* வாழைப்பூவை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும்.

* உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பூ, வெங்காயம், ப.மிளகாய், கடலைமாவு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, சீரகம் முதலியவற்றுடன் அளவாக உப்பையும் போட்டு எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

* மாவில் தண்ணீர் சேர்க்க கூடாது. மாவு தளர்வாகி விட்டால் சிறிது கடலை மாவை சேர்த்து கொள்ளலாம்.

* மாவை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ள வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள மாவை வேண்டிய வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors