உங்க லவ் நம்பர் உங்களை பற்றி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கனுமா

ஒருவரின் பிறந்த நாள் வைத்து, அதாவது, பிறந்த வருடம், மாதம், மற்றும் தேதி வைத்து. அதன் கூட்டுத் தொகை அறிந்து. அதில் வரும் நம்பரை சார்ந்து அவரது காதல் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிந்துக் கொள்ளலாம் வாங்க. எடுத்துக்காட்டாக: உங்கள் பிறந்த நாள் 29-10-1992 என்றால், 29+10+1992 = 33 = 6. எனவே, ஒருவரது லவ் நம்பர் 6.
பெண் #1 : வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வம் உள்ளவர்கள். தனது கணவர் எல்லா விதத்திலும் சிறந்து காணப்பட வேண்டும் என விரும்புவார்கள். லட்சியம், நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும் ஆண் #1 : துணையிடம் நேர்மையாக நடந்துக் கொள்வார்கள். பெருந்தன்மை, நன்றி உணர்ச்சி உடையவர்களாக இருப்பார்கள். மனைவியை சந்தேகப்படாமல் இருந்தாலே இவர்கள் வாழ்க்கை சுகபோகமாக அமையும்.

பெண் #2 : கணவர் கோடு கிழித்தால், ரோடு போடுவார். கோபம் சற்றே அதிகமாக இருக்கும்.கணவரின் எல்லா செயலும், அவர் உடுத்தும் உடை உட்பட அழகாக இருக்க வேண்டும் என எண்ணுவார். பாராட்டை எதிர்பார்க்கும் குணம் கொண்டிருப்பார். ஆண் #2 : இவர் காதலில் ஒரு ரோமியோ என கூறலாம். காதலியின் மடியிலேயே படுத்துக் கிடக்க விரும்பார். அவரது அரவணைப்பை எப்போதும் விரும்புவார். அவரது குழப்பங்கள், சந்தேகங்களுக்கு தீர்வளிக்க, உதவு எப்போதும் முயல்வார்.
9u8oiiou

பெண் #3 : அழகு என்பதை தவிர்த்து, ஆண்மையுடன் விளங்க கூடிய நபரை தான் அதிகம் விரும்புவார்கள். அச்சம் என்பதற்கு இவர்கள் வாழ்வில் இடமே இல்லை. ஆண் #3 : பாரி போல வாரி, வாரி வழங்கி உதவி செய்வார்.வெற்றி, தோல்வி எடையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டிருப்பார். பெண் #4 : தன்னை நேசிக்கும் நபர்களிடம் எப்போதும் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள். தங்களை சுற்றி இருக்கும் நபர்களை எப்போதும் மகிழ்ச்சி பொங்க வைத்துக் கொள்வார்கள்.
4

ஆண் #4 : தன் குடும்பம், மனைவி, குழந்தைக்காக அதிக நேரம் செலவிடுவார்கள். தன்னை நம்பும் நபர்களுக்காக உயிரையும் தர தயங்க மாட்டார்கள். பெண் #5 : பேராசை கொஞ்சம் அதிகம். உலகையே சுற்றி வர வேண்டும் என விரும்புவார்கள். ஆண் #5 : உங்களை பல பெண்கள் விரும்புவார்கள். உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவர்கள் வியக்கும்படி அமையும். உங்கள் காதல் வாழ்க்கை சவாலாக அமையும். பெண் #6 : தனது கணவர், குழந்தைக்காகவே வாழும் நபர். அவர்களை தான் உலகமாக கருதுவார்கள். தான் இருக்கும் இடம் குடிசையாக இருந்தாலும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

ஆண் #6 : அழகை விரும்பும் ஆண். கற்பனை திறன் அதிகம், கவிதை எழுதுவார்கள். பெண்களை மலர் போல கையாளும் குணம் கொண்டிருப்பார்கள். பெண் #7 : பார்த்தல் ஈகோ பிடித்தவர் போல தெரியும், பழகினால் தான் இனிமையானவர் என புரியும். அதிகார தோரணை இருக்கும் ஆணை விரும்புவார்கள்.

ஆண் #7 : புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும்.ஒரு விஷயத்தை பற்றி தெரிந்தால், அதை ஆராய்ந்து படித்து, தெரிந்துக் கொள்ள அதிகம் முயற்சி செய்வீர்கள். கற்பனை அதிகமாக இருக்கும். பெண் #8 : உங்களை ஒரு அபூர்வ பிறவி என கூறலாம். சோம்பேறியாக இருப்பீர்கள். எதையும் முழுமையாக செய்யும் ஆர்வம் இருக்காது. பணம், பதவியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆண் #8 : உங்கள் பொறாமை குணம் தான் உங்களது தடைக்கல். சமூகத்திலும், பணத்திலும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தோல்விகள் பல கண்டாலும் மனம் தளராமல் முயற்சி செய்வீர்கள்.

பெண் #9 : இவரின் அன்பும், காதலும் தான், இவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக்கும். ஆண் #9 : சுறுசுறுப்பு உங்களின் உடன்பிறவா சகோதரன். எதையும் எளிதில் முடித்துவிடுவீர்கள். எங்கு சென்றாலும் உங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors