குழந்தைகளுக்கு சாப்பிட கற்றுக் கொடுங்கள்

குழந்தைகள் எந்த முறையில் சாப்பிட வேண்டும், சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவை என்னவென்று குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லி தர வேண்டும் என்பதை பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சாப்பிட கற்றுக் கொடுங்கள்
குழந்தைகள் சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது. மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்கச் சொல்லித் தர வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை ஏற்படும்.

இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. உணவை வாயில் வைத்த பின்னர், வாயை மூடிய நிலையில் மெல்லுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் ‘சவக் சவக்‘ என்ற அநாகரிகமான சத்தம் வராது. மேலும் உணவுடன் உமிழ்நீர் நன்றாக கலந்து செரிமானம் நன்றாக நடக்கும்.

உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.

டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, குழந்தை தேவையற்ற இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப் பழகும்.
%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%95

தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ உண்பதற்கு, எந்த சூழலிலும் குழந்தையை அனுமதிக்க வேண்டாம். குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.

டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையை பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.

சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. அதேசமயத்தில், அவர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தை கற்றுக் கொள்கின்றனர்.

பழங்களை நன்கு தண்ணீரில் கழுவியபின் சாப்பிடுவதே நல்லது என்பதையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். இதுதான் அனைத்திற்கும் அடிப்படை

Loading...
Categories: குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors