ஆஸ்துமாவை வரவழைத்து மோசமாக்கும் உணவுகள் ,asthma natural treatment in tamil

Loading...

தற்போது ஏராளமான மக்கள் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுகிறார்கள். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்

உதாரணமாக, குறிப்பிட்ட பதப்படுத்தும் கெமிக்கல்களான சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், பொட்டாசியம் மெட்டாபைசல்பைட், சோடியம் மெட்டாபைசல்பைட் போன்றவை நிறைந்த உணவுகள் ஆஸ்துமாவை மோசமாக்கும்.

செயற்கை எலுமிச்சை ஜூஸ் கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த பானங்கள் அல்லது செயற்கை எலுமிச்சை ஜூஸை வாங்கிக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும்.

ஒருவேளை எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் நற்பதமாக தயாரித்துக் குடியுங்கள். உலர் பழங்கள் ஆம், சில நேரங்களில் உலர் பழங்களும் ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கும். குறிப்பாக உலர் ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர் செர்ரி மற்றும் இதர உலர்ந்த பழங்கள் அல்லது காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.

%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%ae

இறால் உறைய வைக்கப்பட்ட இறால்கள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இதில் சல்பைட்டுகள் இருக்கும். வேண்டுமெனில் பிரஷ்ஷான இறாலை சாப்பிடலாம். ஊறுகாய் பாட்டிலில் போட்டு விற்கப்படும் ஊறுகாயில் சல்பைட்டுகள் இருக்கும் வாய்ப்புள்ளதால், ஆஸ்துமா நோயாளிகள் ஊறுகாயில் இருந்து விலகி இருப்பது நல்லது. பாக்கெட்டுகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு உறைய வைக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகள்,

பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் சல்பைட்டுகள் இருக்கும். வேண்டுமானால், உருளைக்கிழங்கை வீட்டிலேயே பேக்கிங் செய்தோ, ரோஸ்ட் செய்தோ சாப்பிடலாம். ஒயின் மற்றும் பீர் ஒயின் அல்லது பீர் குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். இதற்கு அவற்றில் சல்பைட் இருப்பது தான். ஆகவே எந்த ஒரு பானத்தை குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கிறீர்களோ, அவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இதர உணவுகள் தக்காளி, சோயா பொருட்கள், சால்மன், மாப்பிள் சிரப், லெட்யூஸ், பூண்டு, முட்டை, சோள மாவு, அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் சல்பைட்டுகள் இருப்பதால், இந்த உணவுகளையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Loading...
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors