கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட ,cholesterol reducing foods in tamil

தற்போதைய ஃபாஸ்ட் புட் உலகில், அன்றாடம் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், அது நாளடைவில் இதய நோய்க்கு வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பொதுவாக உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உடலே தானாக உற்பத்தி செய்யும். இருப்பினும் உண்ணும் உணவுகள் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேரும் போது, அது அளவுக்கு அதிகமாகி, மோசமான விளைவை உண்டாக்கும். இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையைப் போக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை: 100 கிராம் அளவில் ஓரளவு கனிந்த பரங்கிக்காயை எடுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு 200 மிலி நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பருகும் முறை: இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் குடித்தால்,

உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு காணலாம். கொலஸ்ட்ரால் அளவு எதை குறிக்கிறது? பொதுவாக குளுக்கோஸ் அளவுகள், கொலஸ்ட்ரால் அளவுகள் போன்றவை, நமது டயட் மற்றும் வாழ்க்கை முறையைத் தான் குறிக்கிறது. இவற்றின் அளவு அதிகரிக்கும் போது, அது நாம் மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை மறைமுகமாக சுட்டிக் காட்டும்.
%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2

பூசணி விதைகள் பூசணி விதைகள் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவும். அதிலும் இதில் உள்ள பைட்டோ ஸ்டெரால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். பைட்டோ ஸ்டெரால்கள் பூசணி விதைகளில் உள்ள பைட்டோ ஸ்டெரால்கள், உணவில் உள்ள கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சும் அளவைக் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள்,

பூசணி விதைகளை அன்றாடம் சிறிது உட்கொள்வது மிகவும் நல்லது. மக்னீசியம் பூசணி விதைகளில் மக்னீசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Weight Loss Tips in Tamil

Leave a Reply


Sponsors