கர்ப்பகாலத்தில் அனைத்து பெண்களும் செய்யும் 8 தவறுகள்!

இரண்டு பேருக்கு சாப்பிடுவது: உங்கள் உடலுக்கு தினமும் 1800 முதல் 2000 கலோரிகள் வரை மட்டும் தேவைப்படுகிறது. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை வளர அதிக கலோரிகள் தேவைப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. உங்கள் குழந்தைக்கு தேவையானது எல்லாம் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு மட்டுமே. உங்கள் குழந்தைக்கு தேவையானது

நீங்கள் தினசரி சாப்பிடுவதை விட அதிகமாக 300 கலோரிகள் மட்டுமே. அதிகமாக சாப்பிடுவது உங்களது உடல் எடையை அதிகரித்து பிரசவ காலத்தில் சிக்கலை உண்டாக்கி விடும். என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கர்ப்ப காலத்தில் மூன்று பகுதி பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் புதிதான காய்கறிகள், நட்ஸ் மற்று முட்டை ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 6 முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். மருந்துகள்: பொதுவாக நாம் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்து, அவர் எழுதி கொடுத்த மருந்தை வாங்கி சாப்பிடாமல், நாமே நமக்கு மருத்துவராகிவிடுகிறோம். நீங்களாகவே சாப்பிடும் வலி நிவாரணிகள்

கர்ப்பகாலத்தில் அனைத்து பெண்களும் செய்யும் 8 தவறுகள்!

, காய்ச்சலுக்காக சாப்பிடும் மருந்துகள் மற்றும் முகப்பரு க்ரீம்கள் போன்றவை கர்ப்ப காலத்தில் ஆபத்தை உண்டாக்கும் என்பது பற்றி தெரியுமா? ஆபத்து: நீங்கள் தனக்கு தானே எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் பார்லர் டிரீட்மென்டுகள் உங்களது குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும். எனவே கெமிக்கல்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களையும், மருத்துவரின் பரிந்துரையின்றி சாப்பிடும் மருந்துகளையும் தவிர்ப்பது நல்லது. தூக்கம்: நீங்கள் வேலைக்கு போகிறீர்கள், அல்லது வீட்டில் நிறைய வேலை இருக்கிறது என்று உங்களது தூக்கத்தை குறைத்து கொள்ள கூடாது. உங்களது குழந்தை நன்றாக வளர போதுமான அளவு தூக்கம் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பிரசவ கால வலியை தாங்க, நீங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். குழந்தையுடன் தொடர்பு: கர்ப்ப காலம் என்பது உங்களுக்கு சோர்வையும்,

உடல் வலியையும் தரும். உங்களது குழந்தை வயிற்றிற்குள் உங்களை உதைத்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் குழந்தை உங்களை உதைக்கும் போது குழந்தையுடன் பேசுங்கள். குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். இனிப்பு சாப்பிடுதல் : இனிப்பு சாப்பிடுவதில் உங்களுக்கு கொள்ளைப்பிரியம் இருந்தால், நீங்கள் இனிப்பு சாப்பிடுவதை இரண்டாவது பருவ காலத்தில் குறைக்க வேண்டியது அவசியம். அதிகமாக இனிப்பு சாப்பிட்டால், கர்ப்பகாலத்தில் சக்கரை நோய் வந்துவிடும். அதற்காக இனிப்பை அருகில் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லையே என்று கவலை பட வேண்டாம். இந்த கவலை கூட குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதும், நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கூடாது. உடற்பயிற்சி செய்வதால் உங்களது மன அழுத்தம் குறைகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors