தால் வடா தஹி சாட்,dal vada dah recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள் :

பயத்தம்பருப்பு – 2/3 கப்,
உளுந்து – 1/4 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஓமம் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 3
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,
உப்பு, மிளகு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிக்க,
தயிர் – 2 கப்,
சர்க்கரை – 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்),
சீரகம், மிளகாய்தூள் –  சிறிது.

 

தால் வடா தஹி சாட்,dal vada dah recipe in tamil

செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பையும் 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு இந்த மாவில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, ஓமம், சீரகம், சமையல் சோடா, பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும்.

எண்ணெயை சூடேற்றி இதில் கரண்டியால் மாவை எடுத்து விடவும். வடை பொரிந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். ஆற விடவும்.

ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கலந்து வெண்ணெய் போல் மென்மையாக வரும்படி கலக்கவும்.

கலந்த இந்த கலவையை வடை மேல் ஊற்றி மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு, பச்சை சட்னி சேர்த்து குளிரப்படுத்தி பரிமாறவும்.

மாலை நேர ஸ்நாக்ஸ் தால் வடா தஹி சாட் ரெடி.

Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors