எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள், grandma medicine in tamil

ஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது. அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள்,

வித்தியாச வித்தியாசமான வகையில் பரிசோதனைகள் செய்து காசை பிடுங்கி விடுகிறார்கள். உட்கார்ந்தே வேலை செய்வதனால் தற்போதைய தலைமுறை அதிகம் எலும்பு ஆரோக்கியம் குறைந்து காணப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் உடனே, ஸ்கேன் செய்து பில்லை தீட்டி விடுவார்கள். ஆனால், மிக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இந்த பாட்டி வைத்தியங்களை மேற்கொண்டால் நல்ல பலனை மிக விரைவாக காண முடியும்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் குழந்தைகள்! வளரும் குழந்தைகள் எலும்பு ஆரோக்கியமாக

எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள், grandma medicine in tamil

இருக்க கொய்யா பழம் கொடுத்து வாருங்கள். இது எலும்புகளின் வலிமையை உறுதியாக்கும். வலிமை! எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்க, கோபுரம் தாங்கி செடி வேரை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை உண்டு வந்தால் நல்ல பயன் காணலாம். நோய்! எலும்பு நோய் உள்ளவர்கள், முசுமுசுக்கை இலை மற்றும் தூதுவளை இலை இரண்டையும் காய வைத்து இடித்து பொடியாக்கி சூரணமாக இரண்டு கிராம் உட்கொண்டு வந்தால் எலும்பு நோய்கள் குணமடையும். முறிந்த எலும்பு! பிரண்டை வேர்களை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிராம் தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வந்தால் முறிந்த எலும்பு நல்ல வலு பெறும். முறிவு! எலும்பு முறிவு உண்டான இடத்தில், கழுவி எடுத்து அரைத்த அசோகப்பட்டையை வைத்து கட்டினால் எலும்பு சீக்கிரம் கூடும்

Loading...
Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors