கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு,karpa kala machines

Loading...

ஆஸ்துமா பிரச்சனைகள் கர்ப்பகாலத்தில் பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு?
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் போன்ற சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் கர்ப்பகால பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா பிரச்சனை, கருவிற்கு ஆக்ஸிஜன் செல்வதை தடுத்து விடும். இந்த பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டால், அது கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கி, கர்ப்பிணி பெண்களின் மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை பாதிப்படையச் செய்யும்.

karpa kala machines

கர்ப்பிணி பெண்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், கருவில் உள்ள குழந்தை சிறிதாக, சரியான எடையின்றி பிறப்பதற்கும் அல்லது குழந்தை இறந்து பிறப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்துகளை குறைக்க முடியும்.

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் குழந்தையின் அசைவுகள் மற்றும் மூச்சுக்குழாய் மற்றும் கருவிற்கு ஆக்ஸிஜன் சரியான அளவில் செல்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

Loading...
Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors