குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்,kulanthai sathana unavu in tamil

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது.

ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலருக்கு குழந்தைக்கு எப்போது திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுப்பதென்று சந்தேகம் இருந்தால், கீழே கொடுத்துள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்,kulanthai sathana unavu in tamil

* வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அதுவும் திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

* குழந்தை பிறக்கும் போது இருந்த எடையுடன், தற்போதுள்ள எடையை சோதித்து பார்க்கும் போது, எடையானது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், திட உணவுகளைக் கொடுக்கலாம் என்று அர்த்தம்.

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்

Loading...
Categories: குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors