பன்னீர் பட்டாணி குருமா,matar paneer korma recipe in tamil

தேவையான பொருட்கள் :

பச்சைப் பட்டாணி – அரை கப்
பன்னீர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு.

தாளிக்க :

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
கறிவேப்பிலை – சிறிதளவு

 

பன்னீர் பட்டாணி குருமா,matar paneer korma recipe in tamil

அரைக்க :

தேங்காய்த்துருவல் – அரை கப்
முந்திரி – 8.

செய்முறை :

* பன்னீரை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* நறுக்கிய பன்னீர், பச்சைப் பட்டாணி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.

* விசில் போனவுடன் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குருமாவில் சேர்த்துக் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான பன்னீர் பட்டாணி குருமா ரெடி.

கவனிக்க வேண்டியவை:

தண்ணீர் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாணி அதிகம் வெந்துவிடக்கூடாது. அதிக நேரம் கொதிக்கக் கூடாது. இதில் தண்ணீர் அளவு அதிகமானால், மட்டும் பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கலாம்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors