புருவங்கள் அழகாக தெரிய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்,Natural Beauty Tips kan puruvam valara beauty tips alagu kurippu

ஆயில் மசாஜ் :
புருவத்தில் உள்ள முடி உதிர்ந்தால் இது நல்ல பலன் கிடைக்கும். ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் விரல் நுனியில் தொட்டு, புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லி :

நெல்லி :
நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்ப்பூனும் அதனுடன் ரோஸ்வாட்டர் கலந்து புருவங்களில் தேய்த்து வர கொப்புளங்கள் இருந்தால் மறைந்திடும். வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.
வெங்காயம் :

 

Natural Beauty Tips kan puruvam valara beauty tips alagu kurippu

வெங்காயம் :
வெங்காயத்தை அரைத்து பிழிந்தால் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை புருவங்களில் தேய்த்து இரண்டு நிமிடங்களில் கழுவிவிடலாம். இதனை தினமும் செய்யலாம். வெங்காயம் கண்களுக்கு எரிச்சலை ஏற்ப்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் புருவங்களில் வைத்திருக்க வேண்டாம்.
சீரகம் :

சீரகம் :
ஒரு டம்பளர் நீரில் கால் டீஸ்ப்பூன் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் இறக்கிவிடலாம்.
பின்னர் அது ஆறியதும், மெல்லிய துணியால் அந்த தண்ணீரை நனைத்து புருவங்களில் துடைத்தெடுங்கள். ஒரு நாளில் மூன்று முறை வரை இப்படிச் செய்யலாம்.
உணவு :

உணவு :
விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடலில் தண்ணீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான காபி டீ குடிப்பதை தவிர்த்திடுங்கள். சிட்ரஸ் ஆசிட் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு,நெல்லி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.
அழகு :

அழகு :
சிலர் புருவங்களுக்கு ஐ ப்ரோ பென்ஸில் கொண்டு வரைவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். எப்போதாவது அல்லது வெளியில் செல்லும் போது மட்டும் என்றால் இப்படிச் செய்யலாம். ஆனால் எப்போதும் புருவங்களுக்கு மை தீட்டிக் கொள்வது என்பது தவறானது.
புருவக்கால்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும். அதனை பென்சில் கொண்டோ அல்லது ஐ ப்ரோ ஷேடோ கொண்டோ நாம் அடைத்து விட்டால் புருவ முடிகள் விரைவில் உதிர்ந்துவிடும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors