பச்சை பயறு கிரேவி,pachai payaru gravy for chapathi in tamil

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1/2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 3 பல்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு.

பச்சை பயறு கிரேவி,pachai payaru gravy for chapathi in tamil

செய்முறை:

பச்சை பயறை நீரில் போட்டு, 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை கழுவிப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, வேக விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் குக்கரை திறந்து பயிறை சற்று மசித்து கொள்ளவும்.

புளியை 2 கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை கரைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

குழம்பானது நன்கு கொதித்தது, திக்கான பதம் வந்ததும் அதில் வேக வைத்துள்ள மசித்து வைத்துள்ள பச்சை பயறை போட்டு, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி!!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors