பாவ் பாஜி,pav bhaji recipe in tamil language

தேவையான பொருட்கள் :

காய்கறி கலவை – 1 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி பட்டாணி)
தக்காளி – 1
பாவ் பன் – 4
வெண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
சீரகம் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால்டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
சீரகப்பொடி – அரை டீஸ்பூன்
பாவ்பாஜி மசாலா – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
பாவ் பாஜி,pav bhaji recipe in tamil language

செய்முறை :

காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து மஞ்சப்பொடி, மிளகாப்பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

விசில் அடங்கியதும் காய்கறிகளை கரண்டியால் நன்றாக மசித்து விட்டு பாவ்பாஜி மசாலாவும் போட்டு கலக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காய்கறி கலவையை 10 நிமிடம் நன்றாக கிளறவும். மசாலா வாசம் போய், பாஜி கொஞ்சம் திக்கா வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கிருங்க.

பாவ் பாஜிக்குத் தேவையான பாஜி ரெடி!

பாவ் பன்களை (ரெசிப்பி இங்கே) ரெண்டா நறுக்கி, வெண்ணெய் தடவி டோஸ்ட் பண்ணி ஒரு தட்டுல வச்சு, கொஞ்சம் பாஜியையும் வச்சு, பாஜி மேல லைட்டா வெங்காயம்-கொத்துமல்லித்தழை தூவி, ஒரு துண்டு லெமனையும் வச்சு.. பரிமாறவும்.

Loading...
Categories: சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors