புளிச்ச கீரை சாதம்,pulicha keerai sadam recipes in tamil

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க :

வெங்காயம் – இரண்டு
பூண்டு – பத்து பல்
மிளகு – ஒரு ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 6
புளிச்ச கீரை – 1 கட்டு
உப்பு – தேவையான அளவு.

புளிச்ச கீரை சாதம்,pulicha keerai sadam recipes in tamil

செய்முறை :

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

* ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். (புளிச்ச கீரை என்பதால் உப்பு கொஞ்சம் அளவாக’ போடவும்)

* கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான புளிச்ச கீரை சாதம் ரெடி.

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors