யார், யார் எந்தெந்த அரிசி சாப்பிடுறது உடம்புக்கு நல்லதுன்னு தெரியுமா ,rice benefits in tamil

அரிசி வகைகள்! புழுங்கல் அரிசி : புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் போதுமானது. பச்சரிசி : உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

யார், யார் எந்தெந்த அரிசி சாப்பிடுறது உடம்புக்கு நல்லதுன்னு தெரியுமா ,rice benefits in tamil

சிகப்பரிசி : சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும் சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. பாஸ்மதி அரிசி : மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. மூங்கில் அரிசி : மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும். மாப்பிள்ளை சம்பா : இந்த வகை அரிசியில் புரதம்,நார்ச்சத்து, மற்றும் பல தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இதை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். சீரகச் சம்பா: இந்த வகை

அரிசி இனிப்பு சுவையுடையது. அதனால் அதிகமாக சாப்பிடத்தூண்டும். சிறுவாத நோய்களை தீர்க்க வல்லது இது. தினை அரிசி : இது ரத்த சோகையை அகற்றக்கூடியது. அத்துடன் , காய்ச்சல் சளித்தொல்லை இருந்தால் அதன் வேகத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு. இதற்காக அதிகமாக எடுத்துக்கொண்டால் அது பித்தமாகவும் மாறிடும். மருந்தாகும் அரிசி : வயிற்றுக்கடுப்பு,குடல் வறட்சி இருப்பவர்களுக்கு அரிசி உலையில் கொதிக்கும் போதே ஒரு டம்பளர் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணைய் அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் விரைவில் குணமாகும். யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளை குறைத்து உண்ணலாம். அரிசி உணவில் இருக்கும்

சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே ரத்தத்தில் சேர்ந்திடும். இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவர்கள் செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிற சாமை,தினை போன்றவைகளை எடுக்கலாம். அரிசி சாதம் இரவுகளில் சாப்பிடக்கூடாதா? நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும். இதனால் அரிசிகளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நம் உடலின் சக்தியாக சேரும் ஆனால் இரவுகள் வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக சேரும்., அதனால் இரவு உணவுகளில் அரிசி உணவை தவிர்ப்பது நலம். அரிசி உணவு என்பது சத்தான உணவு தான். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் அது தவறானதாக முடிகிறது.அதனால் அரிசி உணவை முற்றிலுமாக தவிர்க்காமல் உங்கள் உடலின் தேவையறிந்து சாப்பிடுங்கள்

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors