தாய்ப்பால் சுரக்க உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கின் மகத்துவம் பற்றி தெரியுமா ,thai pal surakka unavugal

ஆறடி வரை வளரக்கூடிய “சதாவரி” என்ற பெயர்கொண்ட கொடி இனத்தை ச்சார்ந்த அடர் பச்சையில் ஊசி போன்ற இலைகளும் முட்கள் நிறைந்த தண்டினையும் கொண்ட தாவரத்தின் அடிவேர்தான் தண்ணீர்விட்டான் கிழங்கு. நீர்த்தன்மை நிறைந்த சாரம் கொண்ட இந்தக் கிழங்கில் இருந்து அதிகம் பெண்களுக்காகவே, பல வகை அரிய மூலிகை மற்றும் அலோபதி மருந்துகள் செய்யப்படுகின்றன. பருவம் வந்த காலம் முதல் மாத சுழற்சி நீங்கும் “மெனோபாஸ்” காலம் வரை, பெண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து காத்து, உற்ற தெய்வமாக, தாயாக விளங்கும் வரப்பிரசாதி தான் தண்ணீர்விட்டான் கிழங்கு. இனிப்புச்சுவையுடன் குளிர்ச்சிமிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு, வேர்க் கிழங்குகள் மூலம் விருத்தியாகின்றன. பொதுவாக, உடலின் அனைத்து உள் உறுப்பு புண்கள் ஆற்றும், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும்

 

தாய்ப்பால் சுரக்க உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கின் மகத்துவம் பற்றி தெரியுமா ,thai pal surakka unavugal

உடல் நலிவை போக்கி, உடலை உரமாக்கும், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். கிழங்கின் பயன்கள்: பூப்பருவம் வந்த இளம் பெண்கள் சிலர், இரத்தச் சோகை நோயால் உடல் மெலிந்து காணப்படுவர். அதன் காரணமாக, வெள்ளைப் படுதல், உடலின் உட்சூடு, மார்பகங்கள் சரியான வளர்ச்சியின்மை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். அவற்றுக்கெல்லாம் அரு மருந்துதான் தண்ணீர்விட்டான் கிழங்கு பானம். தண்ணீர்விட்டான் கிழங்கின் பானம் தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, மகப்பேறானப் பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், இளைத்த உடலை பூரிக்க வைக்கும், பெண்களுக்கு வரும் நீர்க்கட்டு மற்றும் வயிற்றின் எரிச்சலைப் போக்கும் தன்மை உடையது. திருமணமானப் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் காரணமாக, சினைமுட்டைகள் பெருக்கம் சீர்கெட்டு, அதன் காரணமாக கருவுருதல் தடைபடுகிறது அந்தக்கோளாறுகள் எல்லாம் சரியாக சினைமுட்டைகள் பெருக்கம் சீராக, இந்த பானமே, சிறந்த தீர்வாக அமைகிறது. கருவுற்ற பெண்களுக்கெல்லாம், இரத்த விருத்திக்கு உதவி செய்வதாக, உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாக, நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியதாக, மேலும் கருவில் இருக்கும் மகவின் மூளை உள்ளிட்ட முக்கிய பாகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக, தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் இருக்கிறது. தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் நீக்கி, சுண்டக் காய்ச்சி, நெய்ப்பதம் வந்ததும், இரவு வேளைகளில்

 

 

, கருவுற்ற பெண்கள் பருகி வர, கருப்பையின் பனிக்குடம் இயல்பான விகிதத்தில் நீர் நிரம்பிக் கத்தியின்றி, சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் காலகட்டத்தில், ஹார்மோன், கால்சியம் குறைபாடுகளால் ஏற்படும் கடும் மனச்சோர்வு, உடல் எரிச்சல், உறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படும். தண்ணீர்விட்டான் கிழங்கு சார்ந்த உணவுகளையே மருந்தாக எடுத்துக்கொண்டால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, உடல்நலம் பெறலாம். பெண்களின் மாத விடாய் சமயத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கை சரிசெய்ய இரண்டு பங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு, ஒரு பங்கு நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மூன்று வேளை என்ற விகிதத்தில் ஒரு வாரம் சாப்பிட, உதிரப்போக்கு நிலைமை சீராகும். மற்ற பொதுப் பலன்கள் தண்ணீர்விட்டான் கிழங்கை வெயிலில் காயவைத்து, மாவாக்கி, அதன் பின்னர் கீழ்க்கண்ட முறைகளில் உட்கொண்டுவர, நோய்கள் அகலும், நோய் எதிர்ப்பு சக்தி மூலம் உடல் வலுவாகும். தண்ணீர் விட்டான் கிழங்கின் மாவை சிறிது வெல்லம் சேர்த்து பாலில் கலந்து அருந்திவர, உடல் உஷ்ணம், உட்சூடு சரியாகும். பால் சேர்த்து அரைத்த கிழங்கின் பொடியை வெயிலில் காயவைத்து இருவேளை சாப்பிட, நீரிழிவு குனமாமாகும். நாள்பட்ட அனைத்துக் காய்ச்சல்களுக்கு, கிழங்கு பொடியுடன் திரிகடுகு சேர்த்து [ சுக்கு மிளகு திப்பிலி சேர்ந்த கலவை, காய கற்ப மருந்து தேனில் குழைத்து அல்லது நீரில் சிறிது கலந்து சாப்பிட, காய்ச்சல் குணமாகும். ஆண்மைக்குறைபாடுகள் நரம்புத் தளர்ச்சி நீங்க, மாவுடன் அஸ்வகந்தா, நெருஞ்சில் சேர்த்து பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட குணமாகும், ஆண்மையைக் காக்கும். நலிந்த உடல் தேற, தண்ணீர் விட்டான் கிழங்கின் பொடியுடன் நெய்யை சேர்த்து இருவேளை சாப்பிட, உடல் பொலிவடைந்து வலுவாகும். கால் எரிச்சல் போக்க, தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறு எடுத்து இரவு படுக்கும் வேளைகளில், காலிலும், பாதத்திலும் பூசி வர, விரைவில் குணமாகும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors