கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீசிங் பிரச்சனையால் உண்டாகும் ஆபத்துகள்,wheezing tips in tamil

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வீசிங். முதலில் வீசிங் என்பது நீங்கள் சுவாசிக்கும் போது விசில் போன்ற சத்தம் எழும், அதுமட்டுமின்றி சுவாசிக்க சிரமமாகவும் இருக்கும். இது தான் வீசிங் என்றழைக்கப்படுகிறது. வீசிங் பிரச்சனை, ஆஸ்துமா அல்லது மூச்சிக்குழாயில் உள்ள பிரச்சனைகள் காரணமாகவும் இந்த வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது. புகைப்பிடித்தல் கூட வீசிங் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். கர்ப்பமாக இருக்கும் போது வீசிங் பிரச்சனை ஆஸ்துமாவினால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்படாத பெண்கள் கூட வீசிங் பிரச்சனையால் கர்ப்பகாலத்தில் பாதிக்கப்படுவார்கள். கர்ப்ப காலத்த்தில் பெண்களை தாக்கும் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சரும பொலிவைக் அதிகரிக்க வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிக்கலாம்?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீசிங் பிரச்சனையால் உண்டாகும் ஆபத்துகள்,wheezing tips in tamil

முழுக்க, முழுக்க பீர் பாட்டில்களால் கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோவில்! முகத்தில் பருக்கள் தோன்றும் இடத்தை வைத்து என்ன நோய் பாதிப்பு என எப்படி அறிவது? Featured Posts பாதிப்பு என்ன? கர்ப்ப காலத்தில் உண்டாகும் வீசிங் பிரச்சனையால் கருவிற்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது. எனவே இந்த பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்டிப்பாக பிரசவ காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சிகிச்சை தேவையா? கர்ப்ப காலத்தில் வரும் ஆஸ்துமா பிரச்சனைக்கு கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனை கவனிக்காமல் விட்டுவிடுவது தவறானது. கவனிக்காமல் விட்டால் என்னவாகும்? குறிப்பிட்ட காலத்தில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது கர்ப்பிணி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். இது ப்ரீக்ளாம்ப்ஷியா எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இந்த நிலை மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை பாதிக்கும். கருவை எப்படி பாதிக்கும்? இந்த பிரச்சனையை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால், கருவில் இருக்கும் உங்களது குழந்தை சிறிதாக வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கும், குழந்தை சிறிதாக அல்லது சரியான

எடையின்றி பிறப்பதற்கு காரணமாக உள்ளது. மிக அரிதாக, குழந்தை இறந்து பிறப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆபத்துகளை குறைக்க முடியும். எப்படி கட்டுப்படுத்துவது? கர்ப்ப காலங்களில் உண்டாகும் இந்த ஆஸ்துமாவை முறையாக கவனிப்பது அவசியம். குழந்தையின் அசைவுகள் சற்று குறைந்தால் கூட நீங்கள் அதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மற்றும் தகுந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும். எதை கவனிக்க வேண்டும்? நீங்கள் பிரசவ காலத்தில் வீசிங் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களது மூச்சுக்குழாய் மற்றும் கருவிற்கு ஆக்ஸிஜன் சரியான அளவில் செல்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாதுக்காப்பு நடவடிக்கை உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், புகை, தூசி ஆகியவற்றில் இருந்து விலகியே இருங்கள். ஆஸ்துமாவை தவிர வேறு சில அலர்ஜிகள் உங்களுக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடன் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors