கூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்

சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலில் படும் போதும் கூந்தல் பழுப்பு நிறத்திற்கு மாற வாய்ப்புண்டு. ஏனெனில் சூரிய கதிர்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் முதன்மையானவையாகும். ஆகவே வெளியே செல்லும் போது, கூந்தலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பொதுவாக புறஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன்கள் உங்களுக்கு உதவும். ஆனால் கூந்தலுக்கு என்ன செய்யலாம். கவலை வேண்டாம். சூரியனின் பாதிப்பிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாத்து கொள்ள சில குறிப்புகளை பார்க்கலாம்.

201708071120163855_preventing-your-hair-brown-hair_SECVPF

உங்கள் கூந்தலை அலசிய ஒவ்வொரு தடவைக்கு பிறகும், சூரிய ஒளியில் வெளியே செல்லும் முன் லீவ்-ஆன் கண்டிஷனரை உபயோகியுங்கள்.

நீங்கள் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு விட்டீர்கள் எனில் உங்கள் கேசத்தை ஒரு ஸ்கார்பை கொண்டு மறையுங்கள்.

கடுமையான ரசாயனத்தை மூலப்பொருளாக கொண்ட சாதனங்களை கூந்தலுக்கு உபயோகிப்பதை நிறுத்துங்கள். மூலிகையிலான பொருட்களை உபயோகிப்பதே கூந்தலுக்கு சிறந்தது.

ஈரமான முடியுடன் வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள். ஈரமான முடியுடன் வெளியில் செல்லும் போது சுற்றுபுறத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவை கூந்தலில் ஒட்டி கொண்டு, அதனை சமாளிக்க முடியாததாக மாற்றும். மேலும் வெளியில் செல்லும் முன் கூந்தலை முழுவதுமாக உலர விடுங்கள்.

சூரிய பாதிப்பிலிருந்து உங்களை காத்து கொள்ள குடையை பயன்படுத்துங்கள். மேலும் அதனை ஒரு பழக்கமாக்கி கொள்வது சிறந்தது.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors