ஆட்டுக்கால்கத்திரிக்காய் குழம்பு,attukal kathirikai kulambu

Loading...

ஆட்டுக்கால் – 4 கால்கள் (சிறிது சிறிதாக வெட்டி வாங்கவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று
தேங்காய் – ஒன்று (சிறியது)
தக்காளி – 2
கத்திரிக்காய் – 2
முருங்கைக்காய் – 2
இஞ்சி – 2 இன்ச் நீள துண்டு
பூண்டு – 5 பல்
கறிவேப்பில்லை – சிறிதளவு
சோம்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
அன்னாசிப் பூ / பிரியாணி பூ – 2
மிளகாய்த்தூள்  – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

ஆட்டுக்கால்கத்திரிக்காய் குழம்பு,attukal kathirikai kulambu

செய்முறை:

ஆட்டுக்கால்களை நன்றாகக் கழுவவும். துருவிய தேங்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, அன்னாசிப் பூ இவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும். குக்கரில் ஆட்டுக்கால் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி, வெயிட் போட்டு 35 – 40 நிமிடங்கள் வேகவிடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து முக்கால் பதம் வேகும்வரை வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து தனியே வைக்கவும்.
குக்கரைத் திறந்து, வதக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய் கலவையை அதில் சேர்த்து 5-7 நிமிடங்கள் வேகவிடவும். ஆட்டுக்கால்-கத்திரிக்காய் குழம்பு தயாரானதும் சாதத்துடனோ இட்லி, தோசையுடனோ சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: ஆட்டுக்கால்கள் வேக அதிக நேரமெடுக்கும்.  ஒவ்வொரு காலும் வேறுபட்ட நேரத்தில் வேகும் என்பதால், 40 நிமிடங்களில் வேகவில்லை என்றால் கூடுதலாக 10 நிமிடங்கள், எலும்புகள் கடிக்க எளிதாக ஆகும்வரை வேகவிடவும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors