கேரட் சூப்,carrot soup seimurai in tamil

பொடியாக நறுக்கிய கேரட் – 2,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
தேங்காய்ப்பால் – 1/4 கப்,
பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன்,
பட்டை – 1,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
கொத்தமல்லித்தழை – சிறிது,
இஞ்சிபூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்.

கேரட் சூப்,carrot soup seimurai in tamil

பாத்திரத்தில் தண்ணீர் 4 கப் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பு போட்டு வேக விடவும். பாதி வெந்ததும் கேரட், தக்காளி சேர்க்கவும். எல்லாம் நன்கு கரைந்து வரும்வரை வேக விட்டு இறக்கவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பட்டை, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம் வதக்கி, கொத்தமல்லித்தழை, பாசிப்பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். உப்பு, மிளகுத்தூள் போட்டு இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப்பால் விட்டு பரிமாறவும்.

Categories: Saiva samyal, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors