சிக்கன் தோசை,chicken dosa in tamil samayal in tamil font

சிக்கன் கொத்துக்கறி – 200 கிராம்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 1,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
கரம்மசாலாத்தூள் – 1  சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
முட்டை – 1,
தோசை மாவு – 1 கப்.

சிக்கன் தோசை,chicken dosa in tamil samayal in tamil font

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம்,  பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் இறக்கவும். தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி, அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் சுட்டு எடுத்து பரிமாறவும்.

Loading...
Categories: Dosai recipes in tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors