பாகற்காய் சாதம் சர்க்கரை நோயாளிகளுக்கான,Bitter GourdRice Recipe,Pavakkai Sadam

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் – 1 கப்,
பாகற்காய் – 1 பெரியது
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
முட்டை – 2,
புளி – எலுமிச்சம்பழ அளவு,
வெங்காயம் – 2
உப்பு – தேவைக்கு,

தாளிக்க…

கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
வறுத்த காய்ந்த மிளகாய் – 3,
கொத்தமல்லித்தழை, புதினா – தேவைக்கு.

பாகற்காய் சாதம் சர்க்கரை நோயாளிகளுக்கான,Bitter GourdRice Recipe,Pavakkai Sadam

செய்முறை :

பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கால் கப் வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பாகற்காயை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சேர்த்து நன்கு கிளறவும்.

பாகற்காய் நன்றாக வதங்கி திக்கான பதம் வந்தவுடன் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.

கடைசியாக புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, அதன் மேல் வேர்க்கடலை, காய்ந்தமிளகாய் அலங்கரித்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான பாகற்காய் சாதம் ரெடி.

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors