எந்த காரணங்களுக்காக தாய்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்,thai paal in tamil tips

தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய் பால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது. அவை

* எச்.ஐ.வி. பாதிப்புடைய பெண்கள் தாய் பால் கொடுப்பதை தவிர்க்கு என்று அறிவுறுத்தப் படுகின்றது. காரணம் தாய்பால் வழியாக குழந்தைக்கு கிருமி பரவும் என்ற காரணத்தினால் இத்தவிர்ப்பு அறிவுறுத்தப்படுகின்றது.

 

thai paal in tamil tips

* தாய்க்கு கடுமையான சிகிச்சை பெறும் டி.பி.பாதிப்பு இருக்குமாயின் தாய் பால் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.

* புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் தாய், தாய்பால் கொடுக்கக் கூடாது.

* குழந்தைக்கு தாய்பாலில் உள்ள இயற்கை சர்க்கரையினை செரிக்க முடியாமல் இருக்குமாயின் தாய்பால் தவிர்க்கப்படுகின்றது.

* சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளும் தாய்மார்களை தாய்பால் கொடுப்பதனை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துவார்.
எனவே உங்கள் மருத்துவரிடம் நீங்கள் என்னென்ன மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதனை ஒன்று விடாமல் கூறுங்கள். ஆயுர்வேத, ஹோமி யோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டால் அதனைப் பற்றியும் கூறுங்கள்.

மார்பக காம்பில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தாய்பால் கொடுப்பது மிக கடினமாக இருக்கும். சிலருக்கு மார்பகமே சற்று புடைத்தாற்போல் வலியாக இருக்கும். இதனால் பால் கொடுப்பதும் கடினமாய் இருக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம் மாறி மாறி கொடுப்பது நிவாரணம் அளிக்கலாம். எனினும் மருத்துவ ஆலோசனை அவசியம். சில சமயங்களில் பால் வரும் சிறு சிறு குழாய்களில் கூட அடைப்பு ஏற்படலாம். இதமான வெந்நீர் ஒத்தடம் இதனை நீக்கி விடும்.

மார்பகத்தில் கிருமி தாக்குதல் ஏற்படலாம். இதன் அறிகுறியாக ஜீரம், சோர்வு, என ஏற்படும். மருந்தில் சரி செய்து விடலாம். பொதுவில் மார்பக வலியினை நீக்க வெந்நீர் ஒத்தடம் அடிக்கடி கொடுத்துக் கொள்வது நல்லது. மன அழுத்தம் தாயினை வெகுவாய் பாதிக்கும். பால் சுரப்பதனையும் பாதிக்கும். எனவே அமைதியும், மகிழ்ச்சியும் மிக அவசியம் என்பதனை உணர்க. சற்று முன் கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு பாலினை எடுத்து டியூப் மூலம் மருத்துவமனைகளில் புகட்டுவர்.

சில அறிகுறிகளுக்கு நாம் உடனடியாக மருத்துவரை காண வேண்டியது அவசியம்.

* திடீரென மார்பகம் சிவந்து, வீங்கி, கடினமாக இருந்தால்.
* பால் சுரப்பது மாறுபட்டு திரவம் வடிவது அல்லது ரத்த கசிவு இருந்தால்.
* குழந்தை எடை அதிகரிக்காமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil, குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors