திருநெல்வேலி சொதி,Tirunelveli Sodhi Seimurai ni tamil

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – 100 கிராம்,
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
தேங்காய் – ஒன்று,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 8 பல்,
பச்சை மிளகாய் – 6,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

திருநெல்வேலி சொதி,Tirunelveli Sodhi Seimurai ni tamil

செய்முறை :

காய்கறிகள், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும்.

தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.

மண் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

பிறகு, அதில் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி… உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான திருநெல்வேலி சொதி ரெடி

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors