வாழைத்தண்டு சூப்,valaithandu Soup Recipe In Tamil

வாழைத்தண்டு – மீடியம் அளவு
சின்ன வெங்காயம் – 3
தக்காளி – 1
சீரகம் – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
மிளகு – அரை ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

 

வாழைத்தண்டு சூப்,valaithandu Soup Recipe In Tamil

வாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு, குச்சியால் நாரை நீக்கி தனியாக வைக்கவும். பின்னர் சீரகம், தனியா, மிளகு மூன்றையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து தூளாக்கவும். இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது என அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை நன்கு வதக்கவும். இத்துடன் வாழைத்தண்டை சேர்த்து 5 டம்ளர் நீர் விட்டு லேசாக கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஏற்கனவே அரைத்த சீரக கலவைத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். வழக்கம்போல வாசனைக்கு கறிவேப்பிலை, மல்லியை போட்டு இறக்கவும். அவ்வளவுதான்…வாழைத்தண்டு சூப் ரெடி… வீட்டில் அனைவரும் குடிக்கலாம்.

Loading...
Categories: Saiva samyal, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors