வயிற்றை குறைக்க இதெல்லாம் கண்டிப்பா சாப்டுங்க vayiru kuraiya sapida vendiyavai,

ஆலிவ் ஆயில் : கெட்ட கொழுப்பை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை சூடுபடுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் இதிலுள்ள நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்துவிடும். தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடிக்கலாம். வெறும் எண்ணெய் குடிக்கப் பிடிக்காதவர்கள் சாலட் அல்லது சூப்பில் கலந்து குடிக்கலாம். ஆப்பிள் :

ஆப்பிளில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்க வல்லது. உடனடியாக ரிசல்ட் தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று ஆப்பிள் சாப்பிடலாம். வாழை : வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம்,மக்னீசியம் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. இதனை தினமும் சாப்பிடலாம். உணவு இடைவேளையின் போது ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் வயிற்றில் சேரும் கொழுப்பை அழித்திடும்.

வயிற்றை குறைக்க இதெல்லாம் கண்டிப்பா சாப்டுங்க vayiru kuraiya sapida vendiyavai,

 

ஆசிட் பழங்கள் : எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.இதில் விட்டமின் சி அதிகமாக இருக்கும். இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை குறைப்பதால் உணவை ஜீரணிக்க உதவும் கொழுப்பையும் ஜீரணிக்கும். கடல் உணவுகள் : கடலிலிருந்து கிடைக்க கூடிய மீன்,நண்டு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கும். இது நம் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை அழிக்க வல்லது. தர்பூசணிப்பழம் : இந்தப் பழத்தில் அதிகப்படியான தண்ணீர் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. இது உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுப்பதால் அடிக்கடி உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றாது. பாதாம் : இதில் ஒமேகா 3 மற்றும் ப்ரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தினமும் மூன்று

முதல் நான்கு பாதாம் வரை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும். அவகோடா : இதில் ஒலியிக் ஆசிட் நிறைந்து காணப்படுகிறது. இதனை உண்பதால் பசியுணர்வு மட்டுப்படுத்தப்படும். அதோடு இதில் ஃபைபர் மற்றும் நல்ல கொழுப்பு இருப்பதால் உடல் எடையை தவிர்க்க முடியும். தக்காளி : இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.தக்காளி ஜூஸ் செய்து குடிக்கலாம். சமைத்து உண்பதை விட பச்சையாக அப்படியே சாப்பிடுவது தான் நல்ல பலன் கொடுக்கும். பெர்ரீஸ் : ஸ்ட்ராபெர்ரீ, ப்ளூ பெர்ரீ,ப்ளாக் பெர்ரீ போன்ற பழங்களை சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்தோசியானின்ஸ் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.

Loading...
Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors