வெல்லம் பிடி கொழுக்கட்டை,vellam pidi kolukattai

Loading...

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1 கப்
துருவிய வெல்லம் – அரை கப்
தேங்காய்ப் பல் – கால் கப்
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
நெய் – சிறிதளவு.

வெல்லம் பிடி கொழுக்கட்டை,vellam pidi kolukattai

செய்முறை :

பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள்.

தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் மாவு, தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள்.

பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, கொள்ளவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

செய்வதற்கு மிக சுலபமான கொழுக்கட்டை. ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்.

Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள்

Leave a Reply


Recent Recipes

Sponsors