கார்ன் – முட்டை சூப்,corn soup in tamil

மக்கா சோளம் – 500 கிராம்
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
பால் – 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் – 1
பட்டர் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி – தேவைக்கேற்ப

 

கார்ன் - முட்டை சூப்,corn soup in tamil

அலங்கரிப்பதற்கு :

வெங்காயத்தாள் – சிறிதளவு,
முட்டை – 2.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.

முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் பட்டரைச் சூடாக்கி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக்கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் சோளக் கலவையும் தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, கார்ன் சூப்பை சூடாகப் பரிமாறலாம்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors