காலிஃப்ளவர் போண்டா,kali flower Bonda in tamil

கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – 75 கிராம்
வெள்ளை ரவை – 1 டேபுள் ஸ்பூன்
காலிஃப்ளவர் – 300 கிராம்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழை – 1/2 கப்
கறிவேப்பிலை – 2 கொத்து
ஓமம் – 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு – ருசிக்கேற்ப
கடலை எண்ணெய் – பொரிக்க.

காலிஃப்ளவர் போண்டா,kali flower Bonda in tamil

செய்முறை :

ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி உப்பு 10 நிமிடம் தண்ணீரில் போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சூடாக காய்ச்சிய கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து, பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு மாவை கலந்து வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்து வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் நன்றாக தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

தீயை மிதமான (மீடியம்) தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் போண்டாவை எண்ணெயில்லாமல் வடிகட்டி எடுத்து பரிமாறவும்.

சுட சுட காலிஃப்ளவர் போண்டா தயார்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors