முருங்கைக்காய் அவியல்,murungakkai aviyal,murungakkai aviyal samayal

முருங்கைக்காய் – 3
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – அரை கப்
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது.
முருங்கைக்காய் அவியல்,murungakkai aviyal,murungakkai aviyal samayal

செய்முறை :

முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் முருங்கைக்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

முருங்கைக்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்த தேங்காய் கலவையை முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

மற்றொரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, முருங்கைக்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்காய் அவியல் ரெடி!!!

இந்த அவியல் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors