உருளைக்கிழங்கு காலிபிளவர் வறுவல் சைவம், Saiva samyal potato coloring flower fry

Loading...

உருளைக்கிழங்கு – 4
காலிபிளவர் – 1
வெங்காயம் – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி நசுக்கியது – 1 டீஸ்பூன்
பூண்டு நசுக்கியது – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கீற்று
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.
சைவம், Saiva samyal potato coloring flower fry

செய்முறை :

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி அரை வேக்காடாக வேகவைக்கவும்.

காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு அதில் உருளைகிழங்கு காலிப்பிளவர் பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி சிறிது நீரை தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.

காய்கள் நன்கு வெந்தவுடன் டிரையாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி கிளறி விட்டு இறக்கவும்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors