காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்,vegetables & fruits salad in tamil

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் – 100 கிராம்,
வெள்ளரிக்காய் – 2,
குடமிளகாய் – 1,
தக்காளி – 3,
ஸ்ட்ராபெர்ரி – 5,
ஆப்பிள் – 1,
திராட்சை – 100 கிராம்,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்,
உப்பு – சிறிதளவு,
மிளகு தூள் – அரை ஸ்பூன்.

காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்,vegetables & fruits salad in tamil

செய்முறை :

ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை (விதையை எடுத்து விட்டு) நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெள்ளரிக்காய், குடமிளகாய், ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.

முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கி காய்கறிகள், பழங்களை சேர்த்து இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து போட்டு நன்றாகக் கலக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors