சரும பளபளப்பை மெருகூட்டும் பீட்ரூட் ஜூஸ்,beetroot juice in tamil recipe

பல்வேறு ரசாயனம் கலந்த அழகுச் சாதனப்பொருட்களைத் தேடி அலையும் நாம், இயற்கையாகக் கிடைக்கும் பீட்ரூட்டை பயன்படுத்தி, சரும அழகை மெருகேற்றலாம்.

பீட்ரூட் உடலுக்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும். அதில் பலரும் அறிந்தது உதட்டின் நிறத்தை பிங்க்காக மாற்றலாம் என்பது தான். ஆனால் பீட்ரூட் பல்வேறு சரும பராமரிப்பு குணங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக பீட்ரூட்டைக் கொண்டு கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது தான் மிகவும் சிறந்தது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் முக்கிய காரணம். பீட்ரூட்டின் மகத்துவங்களில் சில பின்வருமாறு:

1) ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா? அப்படி என்றால் ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த செயலை இரவு படுக்கும் முன் செய்ய வேண்டும்.
சரும பளபளப்பை மெருகூட்டும் பீட்ரூட் ஜூஸ்,beetroot juice in tamil recipe

2) பருக்களைப் போக்க வேண்டுமெனில், 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டேபிள் ஸ்ரூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமன்றி, அதனால் வந்த தழும்புகளும் மறையும்.

3) கரும் புள்ளிகள் முகத்தில் அதிகம் இருந்தால், அதில் 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் சக்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், கரும் புள்ளிகள் நீங்கும்.

4) கருவளையங்களைப் போக்க, பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்களால், கருவளையம் எளிதில் மறையும்.

5) பிங்க் நிற உதடுகளைப் பெறுவதற்கு, தினமும் பீட்ரூட் சாற்றினைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்ய வேண்டும் அதிலும் தினமும் இரவில் படுக்கும் முன் பீட்ரூட் ஜூஸை உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து கழுவ வேண்டும்.

6) சருமம் அதிக வறட்சியடைந்தால் பீட்ரூட் ஜூஸ் உடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்

7) கழுத்தில் உள்ள கருமை மறைய பீட்ரூட் ஜூஸை கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் ஐஸ் கட்டிகளைக் கொண்டு கழுத்தை மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை மறையும்.

8) எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி உலர வைத்து, பின் பாலைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கலாம்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors