பீட்ரூட் கூட்டு ,beetroot pulao in tamil font
பீட்ரூட் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
கடலைப் பருப்பு – 4 மேசைக்கரண்டி
அரைத்த தேங்காய் விழுது – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு – அரைத் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பீட்ரூட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், ஊற வைத்த கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் மசாலா தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
பீட்ரூட் வெந்து நீர் வற்றியதும் இறக்கவும்.
சுவையான பீட்ரூட் கூட்டு தயார்