பாகற்காய் பயன்கள்,bitter gourd benefits in tamil,pavakkai maruthuvam

Loading...

மருத்துவப் பயன்கள்

பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி ஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு தேவைப்படும் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.

அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

பாகற்காய் பயன்கள்,bitter gourd benefits in tamil,pavakkai maruthuvamபாகற்காய் பயன்கள்,bitter gourd benefits in tamil,pavakkai maruthuvam

மேலும் செரிமான அமிலமான காஸ்ட்ரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் பசி அதிகரிக்கும்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

‘டைப் 2’ நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ‘பாலிபெப்டைடு-பி’ என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.

எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்!

ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். ‘இலைமறைவு காய்மறைவு’ என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.

இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும். முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். இதன் எல்லா பாகங்களுமே கசப்புதான். ஊறுகாய்க்குச் சிறந்தது. செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இதன் இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

வாங்கும் போது கவனிக்கவேண்டியது

பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

என்ன சமைக்கலாம்

பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

Loading...
Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors