முட்டைக்கோஸ் பாசிபருப்பு குழம்பு,cabbage pasi paruppu kulambu
பெரிய முட்டைக்கோஸ் – 2 கப் ( பொடியாக அரிந்து கொள்ளவும்)
பாசிபருப்பு – 1/4 கப்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
தேங்காய் – 1/4 மூடி
குரு மிளகு – 6
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 7 அல்லது 8
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், குரு மிளகு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயை சிதிளவு தண்ணீர் ஊற்றி அரைத்த கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து வே கவைத்த முட்டைக்கோஸ், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
முட்டைக்கோஸ் முக்கால் வேக்காடு வெந்ததும் அரைத்த விழுதுகளைச் சேர்க்கவும். முட்டைக்கோஸ் மிருதுவாக வெந்ததும் வேக வைத்த பாசிபருப்பை சேர்த்து 1 அல்து 2 நிமிடத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை இட்டு தாளித்து அதை குழம்பில் சேர்க்கவும்.
முட்டைக்கோஸ் பாசிபருப்பு குழம்பு ரெடி