ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் நன்மைகள்,carrot juice benefits in tamil

பார்வை மேம்படும் தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன்,

பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். இரத்த சர்க்கரை அளவு சீராகும் கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம். புற்றுநோய் தடுக்கப்படும் கேரட் ஜூஸில் கரோட்டீனாய்டு வளமாக நிறைந்துள்ளது. கரோட்டீனாய்டு நிறைந்த உணவுப் பொருளை அதிகம் எடுத்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வருவது நல்ல வழியாகும். உலர்ந்த சருமத்திற்கு நல்லது வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான் சருமம் அதிகம் வறட்சியடைவதோடு, நகம் மற்றும் முடியும் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது. கேரட்டில் இந்த வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன்

ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் நன்மைகள்,carrot juice benefits in tamil

மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம். செரிமானம் மேம்படும் உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கேரட் ஜூஸ் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும். நுரையீரல் ஆரோக்கியம் கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளதால், அதனை ஜூஸ் போட்டு தினமும் குடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, சிகரெட் பிடித்தோ அல்லது சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தோ நுரையீரலில் படிந்த நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். புதிய தாய்மார்களுக்கு நல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors