கேரட் கீர்,carrot kheer recipe in tamil

கேரட் கீர் தேவையான பொருட்கள் கேரட் – 1 கிலோ பால் – 1/2 லிட்டர் முந்திரி – 150 கிராம் ஏலக்காய் தூள் – சிறிதளவு சர்க்கரை – தேவையான அளவு செய்முறை கேரட்டை வேக வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

கேரட் கீர்,carrot kheer recipe in tamil

முந்திரியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பாலை கொதிக்க வைத்து அரைத்த கேரட், முந்திரி மற்றும் சர்க்கரை, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். சத்துமிக்க பானம் இது எனர்ஜி மால்ட் தேவையானவை பொட்டுக் கடலை – 100 கிராம் உளுந்து – 100 கிராம் முழு கோதுமை – 200 கிராம் சர்க்கரைத்தூள் – 100 கிராம் பால்பவுடர் – 100 கிராம் கம்பு அரிசி – 100 கிராம் கேப்பை அரிசி – 200 கிராம் ஏலம் – 2 அல்லது 3 முந்திரி பருப்பு – 50 கிராம் செய்முறை உளுந்து, கோதுமை, கேப்பை, கம்பு தானியங்களை தனித்தனியே

சிறுதீயில் வறுத்து நன்கு பொரிந்து சிவந்து மணம் வரும்வரை வறுக்கவும். வறுத்த தானியம், பொரிகடலை, ஏலப்பொடி பால்பவுடர், சர்க்கரை முந்திரி இவற்றை நன்கு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும். கொதித்த நீரில் இந்த பவுடரை போட்டு சர்க்கரை கலந்து சாப்பிடலாம். பால் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors