வெந்தய கீரை தொக்கு,vendhaya keerai thokku recipe in tamil

தேவையான பொருட்கள்:

1 கப் வெந்தய கீரை
1/2 கப் சீனா வெங்காயம்
1 கப் தக்காளி பொடியாக நறுக்கியது
1/4 கப் தேங்காய் அல்லது முந்திரி விழுது
3 மேஜைக்கரண்டி எண்ணெய்
2 தேக்கரண்டி சாம்பார் மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 தேக்கரண்டி உப்பு அல்லது தேவையான அளவு
1 தேக்கரண்டி கடுகு

 

வெந்தய கீரை தொக்கு,vendhaya keerai thokku recipe in tamil

செய்முறை:

1. வெந்தய கீரை வேரை நறுக்கி நன்றாக 3 அல்லது 4 முறை கழுவவேண்டும்.

2. ஒரு வாணலியில், மிதமான சூட்டில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி கடுகுசேர்த்து பொறியவிடவும்.

3. கடுகு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. பின்னர் நறுக்கிய தக்காளி சாம்பார் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் விடும்வரை வதக்கவும்.

5. இப்பொழுது சுத்தமாக கழுவிய வெந்தய கீரை சேர்த்து 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.

6. இறுதியாக தேங்காய் அல்லது முந்திரி விழுது சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

7. சுவையான வெந்தய கீரை தொக்கு தயார். சூடான வெள்ளை சோற்றுடன் பரிமாறவும்

Loading...
Categories: arokiya unavu in tamil, Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors