பட்டாணி தோசை,Green Peas Dosa Recipe in tamil ,Dosai Samayal kurippugal

அறுபதாம் குருவை அரிசி – 1 குவளை,
உளுந்து – 1/5 குவளை,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி – 100 கிராம்,
நறுக்கிய வெங்காயம் – 25 கிராம்,
தக்காளி – 25 கிராம்,
வத்தல் பொடி – 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்,
கரம்மசாலா பொடி – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

பட்டாணி தோசை,Green Peas Dosa Recipe in tamil

அறுபதாம் குருவை அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனியாகவும் ஊற வைக்கவும். ஊறியதும் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து, 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். பச்சைப் பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, கரம்மசாலா, உப்பு கலந்து வதங்கியதும் இறக்கவும். பச்சைப்பட்டாணி கலவை ரெடி.
புளிக்க வைத்திருக்கும் அறுபதாம் குருவை மாவில் சிறிது தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து சூடான தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி அதன் மேல் பச்சைப்பட்டாணி கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி மசால் தோசை போல் சுட்டு எடுத்து பரிமாறவும்.

Loading...
Categories: Dosai recipes in tamil, Saiva samyal, சைவம்

Leave a Reply


Sponsors