கர்ப்பமாக இருக்கும் போது உணவு ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது, karpa kala unavugal list

கலோரி : கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணியாக இருக்கும் போது கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். தானியங்கள் : முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது.

கர்ப்பமாக இருக்கும் போது உணவு ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது, karpa kala unavugal list
புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. அதிக ரிஃபைன் செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது. அதனை தவிர்த்திட வேண்டும். அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். வாந்தி : கர்ப்பிணிப்பெண்களுக்கு வாந்தி,ஒமட்டல் ஏற்படும் அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம். குமட்டல், வாந்தி குறைய, காலையில் அதிக நேரம் வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் ஆகாரம் எடுத்துக்கொள்வது, மனத்துக்குப் பிடித்ததை சாப்பிடுவது நல்லது. அதிகமான புளிப்புச் சுவை, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கலாம். ரத்த சோகை : தாய்க்கு ரத்தசோகை இருந்தால், குழந்தை குறை மாதமாக, எடை குறைவாக இருக்கக்கூடும். எனவே, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் மாத்திரை (Iron Folic Acid Tablet) 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கருவுற்ற சில தாய்மார்களுக்கு கால்ஷியம் மாத்திரைகள் தேவை. ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடுவதால், பிறக்கும் குழந்தைக்கு நரம்பு மண்டல குறைபாடுகளைத் தவிர்க்கலாம். தண்ணீர் :

கர்ப்பகாலத்தின் போது தண்ணீர் அதிகம் பருகவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர்,பழச்சாறு,இளநீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து : தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை மட்டுமே எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து சாப்பிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து, மற்றும் கால்சியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். எள்ளுருண்டையில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியிருப்பதால் எள்ளுருண்டை சாப்பிடலாம். தவிர்க்க : மதிய நேர உணவில் தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய் ஏற்ப்பட்டிருந்தால் , காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம். கூல்டிரிங்க்ஸ், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா, சேமியா, கிழங்கு வகைகள், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, கருவாடு போன்றவற்றை கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors